Take a fresh look at your lifestyle.

ஹிட் லிஸ்ட் பட விமர்சனம்

17

நடிகர்கள்: விஜய் கனிஷ்கா, சரத்குமார்,

ஒளிப்பதிவு: ராம்சரண்

இசை: சத்யா

தயாரிப்பு: கே எஸ் ரவிக்குமார்

இயக்கம்: கார்த்திக் – சூர்ய கதிர்

எந்த உயிருக்கும் தீங்கு செய்யக் கூடாது என்ற வள்ளலார் வழியைப் பின்பற்றும் விஜய் (விஜய் கனிஷ்கா) இரண்டு கொலைகளைச் செய்ய வேண்டிய நிர்பந்தம்.
அந்த நிர்ப்பந்தத்தை ஏற்படுத்துபவர்கள் யார்? விஜய் கொலைகளைச் செய்தானா? எதற்காக இப்படி ஒரு சிக்கலை ஏற்படுத்துகிறார்கள்? என்பதுதான் ஹிட்லிஸ்ட் படம்!

இயக்குநர் விக்ரமன் மகன் விஜய் கனிஷ்கா நாயகனாக அறிமுகமாகியிருக்கும் படம் இது. ஆனால் தேர்ந்த நடிகனைப் போலவே உள்ளது அவரது நடிப்பு. குறிப்பாக அத்தனை வலிமை மிக்க ரவுடியை அவர் கொல்லப் போகும் காட்சிகள்.

காவல் அதிகாரியாக வரும் சரத் குமார் படத்துக்கே கம்பீரம் தருகிறார்.

ஸ்ம்ருதி வெங்கட், முனிஷ்காந்த், கவுதம் மேனன், சித்தாரா உள்ளிட்டோரும் அவரவர் வேடங்களை சிறப்பாகச் செய்துள்ளனர்.
சத்யாவின் பின்னணி இசையும் ராம்சரணின் ஒளிப்பதிவும் படத்தை விறுவிறுவென கொண்டு செல்கின்றன. அந்த முகமூடி மனிதன் யார் என்பது எதிர்பாராத திருப்பம்.

ஆனால் கொலைக்கான காரணம் என்று சித்தரிக்கப்படும் காட்சி உருக்கமாக இருந்தாலும் லாஜிக் இல்லாமல் இருக்கிறது.

இயக்குனர்களாக அறிமுகமாகியிருக்கும் கார்த்திக் – சூர்ய கதிர் இருவரும் முதல் படத்திலேயே நம்பிக்கை தந்திருக்கிறார்கள்.

Rating: 3.0/ 5.0