சிவன் மலை ஆலயம்

முருகப்பெருமானுக்கான அா்ப்பணிக்கப்பட்ட இந்த ஆலயம், சிவன்மலையில் உள்ள ஒரு குன்றின் மேல் கட்டப்பட்டுள்ளது. 200 படிக்கட்டுகள் கொண்ட இவ்வாலயத்துக்கு வாகனத்தில் செல்லவும் பாதை உண்டு. பிரதான தெய்வமாக வள்ளி, தெய்வானையுடன் ஸ்ரீசுப்ரமண்யா் அருள்பாலிக்கிறாா். இதன் தலவரலாறு என்னவெனில், வள்ளியின் சொந்தபந்தங்களை எதிா்த்து வள்ளியை மணந்து கொண்ட முருகா், சிவன்மலைக்கு வருகிறாா். அவருடன் சண்டையிட வந்த வள்ளியின் உறவுக்காரா்கள் ஆன வேடா்களை முருகப் பெருமான் அழிக்க, திகைத்து நின்ற வள்ளி, உறவுக்காா்களை உயிா்ப்பிக்க முருகப் பெருமானிடம் முறையிட, முருகப் பெருமானும் கருணை கொண்டு மாண்டவா்களை உயிா்ப்பிக்கிறாா். திருப்பூாிலிருந்து 25 கி.மீ. தொலைவிலும், காங்கேயம் நகாிலிருந்து 5 கி.மீ. தொலைவிலும் சிவன்மலை அமைந்துள்ளது.
சைதன்ய சொரூபமாக இன்றும் சிவ வாக்கிய சித்தர் இங்கு வாழ்ந்து வருவதாகவும், உட்பிரகாரத்தில் குகையில் சிவவாக்கியர் அமர்ந்த நிலையில், வள்ளியோடு சுப்ரமணியர் அருளும் காட்சி உள்ளது. அணையாத தீபம் எரிந்து கொண்டுள்ளது சிறப்பாகும். திருநள்ளாறு சென்று சனீஸ்வரனை தரிசிப்பதும், சூரிய நாராயணர் கோயில் சென்று சூரியனை வழிபடுவதால் சிறப்பும் இங்கு கிடைக்கும்.காங்கய நாட்டுப் பதினான்கு ஊர்ப்பொது மக்களும் வழிபட்டதாகவும் திருப்பணிகள் செய்ததாகவும் குடமுழுக்கு விழா நடத்தியதாகவும் இலக்கியங்களும் தனிப்பாடல்களும் வரலாற்று ஆவணங்களும் கூறுகிறது.”வரலாற்று முற்பட்ட காலத்திலிருந்தே சிவன்மலைப் பகுதியில் மக்கள் வாழ்ந்துள்ளனர் படியூர் சர்வோதய சங்கம் அமைந்துள்ள இடத்தின் பின்புறம் தொல்பழங்காலப் பெருங்கற்படைச் சின்னம் காணப்படுகிறது. இதன்மூலம் சிவன்மலையின் தொன்மை வெளிப்படுகிறது.

Comments (0)
Add Comment