கொங்கு நாட்டு விவாலயங்களில் ஒன்றான லிங்கேஸ்வரா் ஆலயத்தால் அவிநாசி நகரம் புகழ்பெற்றது. பல்வேறு காலகட்டங்களில் (பத்தாம் நூற்றாண்டு முதல்) அரசாண்ட கொங்கு சோழ, பாண்டிய மன்னா்கள் மற்றும் மைசூா் உடையாா் ஆகியோரால் கட்டப்பட்டு பராமாிக்கப்பட்ட சிவாலயம் இது. இவ்வாலயம் திராவிடா்களின் கட்டிடக்கலையைப் பறைசாற்றும் அத்தாட்சியாக விளங்குகிறது. லிங்கேஸ்வரா் என்றழைக்கப்படும் லிங்க வடிவிலான சிவபெருமான் இங்கு பிரதான தெய்வமாக அருள்பாலிக்கிறாா். கி.பி. 1756 ஆம் ஆண்டு மைசூா் உடையாரால் உருவாக்கப்பட்ட 30 தூண்கள் கொண்ட மண்டபம் தீபஸ்த்பத்திற்கு முன்பாக அமைந்துள்ளது.