Take a fresh look at your lifestyle.

ராணுவ மருத்துவ சேவையில் நான்கு தசாப்தங்கள்; வியப்பூட்டும் சர்ஜன் வைஸ் அட்மிரல் ஆர்த்தி சரினின் சாதனை பயணம்

18

புதுடெல்லி: எதிரிகளிடம் இருந்து நாட்டு மக்களை காப்பதற்கு எல்லையில் இரவு பகலாக காத்து நிற்பவர்கள் ராணுவ வீரர்கள். அவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்படும்போதும், போர்க்களத்தில் காயமுறும்போதும் மருத்துவ சேவை வழங்குவதற்கென ராணுவத்தில் தனிப்பிரிவு உள்ளது. அந்த பிரிவில் 40 ஆண்டுகளாக படியாற்றி வருகிறார் சர்ஜன் வைஸ் அட்மிரல் ஆர்த்தி சரின். ராணுவத்தில் அறுவை சிகிச்சை மருத்துவராக வாழ்க்கையைத் தொடங்கி, இந்திய ஆயுதப் படை மருத்துவ சேவைகளின் தலைமை இயக்குநர் என்ற உயரிய பொறுப்பை வகித்து வருகிறார். இந்த உயரிய பதவியை அலங்கரிக்கும் முதல் பெண் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.

ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு அதிநவீன மருத்துவ சிகிச்சை கிடைக்க செய்வதிலும், புதுமை மற்றும் கருணையுடன் வருங்கால ராணுவ மருத்துவ சிகிச்சையை வடிவமைப்பதிலும் இவர் முக்கிய பங்காற்றியுள்ளார். இவரது அர்ப்பணிப்புடன் கூடிய சேவையைப் பாராட்டி, இவருக்கு அண்மையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பரம் விசிஷ்ட் சேவா பதக்கத்தை வழங்கி கௌரவித்தார்.

இந்நிலையில், ஆர்த்தி சரின், ஈடிவி பாரத் ஊடகத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அதில், ஆயுதப்படை மருத்துவ சேவைகளில் தனது பயண அனுபவங்கள் குறித்தும், ராணுவத்தினருக்கான எதிர்கால மருத்துவம் குறித்த தனது தொலைநோக்கு பார்வையையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.