Take a fresh look at your lifestyle.

மீண்டும் வணக்கம் இந்தியா!

14

வணக்கம்…!

வலையுலகில், தமிழில் ஒரு முழுமையான செய்தித் தளம், விருப்பு ,வெறுப்புக்கு அப்பால் நின்று நடுநிலையோடு செய்திகளை வெளியிடுவதே அரிதினும் அரிதாகிவிட்ட சூழலில், மீண்டும் ‘வணக்கம் இந்தியா’வைத் தொடரும் அவசியம் ஏற்பட்டுள்ளது.

இந்த கொரோனா காலகட்டத்தில் பல செய்தித் தளங்கள் முடங்கிப் போயுள்ளன. பல அச்சு இதழ்கள் வலையுலகுக்கு இடம் பெயர்ந்துள்ளன. ஆனால் செய்திகளின் தரம், நிறம் மட்டும் மாறவே இல்லை. செய்திகள் இப்போது அவரவர் கருத்துகளாக இடம்பெறும் நிலைதான் பரவலாகக் காணப்படுகிறது. ‘வணக்கம் இந்தியா’ இந்த நிலையிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, செய்திகளைச் செய்திகளாகவும், கருத்துக்களை அவரவர் கருத்துக்களாகவுமே பதிவு செய்யும் பணியை மேற்கொள்கிறது.

இன்றைய சூழலில் செய்திகளை முந்தித் தருவது மட்டுமல்ல, அவற்றை முழுமையாகத் தருவதே முக்கியம். அப்படி ஒரு முழுமையான செய்தித் தளமாக வணக்கம் இந்தியா உங்கள் பார்வையில் திகழும்.

– டாக்டர் எஸ் ஷங்கர்
முதன்மை ஆசிரியர்
வணக்கம் இந்தியா