Take a fresh look at your lifestyle.

24 மணி நேர கனமழை: புதுவை, காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை!

16

புதுச்சேரி: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதுச்சேரியில் நேற்று முன் தினம் பெய்யத்தொடங்கிய மழையானது நேற்று இரவு முதல் கனமழையாக பெய்யத் தொடங்கியது. இதனால் நகர் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. தற்போதும் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.

புதுவையின் மற்றொரு பகுதியான காரைக்காலிலும் கனமழை தொடர்கிறது.

இந்நிலையில், புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.

ஆனால் இன்றைய தினம் கல்லூரிகள் திறப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அறிவிக்கப்பட்டபடி இன்று உரிய வழிகாட்டுதல்களுடன் கல்லூரிகள் திறக்கப்பட்டன. மழையிலும் மாணவர்கள் ஆர்வத்துடன் கல்லூரிகளுக்கு வந்தனர்.