Take a fresh look at your lifestyle.

மாநாடு படக்குழுவை வாழ்த்திய நடிகர் ரஜினிகாந்த்!

11

சென்னை: வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘மாநாடு’ முதலில் தீபாவளிக்கு வெளியாவதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் மாநாடு நவம்பர் 25-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

பல சிக்கல்களைகத் தாண்டி படம் நேற்று முன்தினம் வெளியானது. படம் பார்த்த ரசிகர்கள் சிம்புவிக்கு இது தரமான மறுவரவு படம் என்று கொண்டாடி வருகின்றனர். அதேவேளையில், மாநாடு படம் அனைத்து தரப்பினரிடமும் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் மாநாடு படம் பார்த்த நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர்கள் எஸ்ஜே சூர்யா, சிம்பு, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உள்ளிட்டோருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனை உறுதி செய்துள்ள மாநாடு படத்தில் இயக்குநர் வெங்கட் பிரபு, தனது ட்விட்டரில், “மாநாடு படம் பார்த்துவிட்டு தொலைபேசியில் தொடர்பு கொண்டு படக்குழுவுக்கு தலைவர் (ரஜினிகாந்த்) வாழ்த்து தெரிவித்தார்” என்று பதிவிட்டுள்ளார்.

எஸ் ஜே சூர்யா

படத்தின் இன்னொரு நாயகனாக நடித்த எஸ்ஜே சூர்யாவும் ட்விட்டரில் ரஜினிக்கு நன்றி தெரிவித்து, தன் வாழ்நாள் லட்சியம் நிறைவேறிவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ள பதிவு: