Take a fresh look at your lifestyle.

பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையே வெளியாகும் விடுதலை 2

13

 

வெற்றி மாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சுவாரியார் நடிப்பில் உருவாகியுள்ள படம் விடுதலை 2. இப்படத்தின் முதல் பாகம் விடுதலை என்ற பெயரில் வெளியாகி கடந்த ஆண்டு பெரும் வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தின் இரண்டாம் பாகம் இன்று உலகெங்கும் வெளியாகிறது. இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். ஏற்கெனவே படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதால், படத்துக்கு ரசிகர்களிடையே பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தப் படம் இந்தியா தவிர, உலகெங்கும் பல்வேறு நாடுகளில் ஆயிரத்துக்கும் அதிகமான திரைகளில் வெளியாக உள்ளது.