வெள்ளிக்கிழமை மிகவும் சக்தி வாய்ந்த, அருள் நிறைந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் செய்யப்படும் வழிபாடுகள் மிகவும் சக்தி நிறைந்ததாகவும், உடனடியாக பலன் தரக் கூடியதாகவும் கருதப்படுகிறது. இது மகாலட்சுமியின் பரிபூரண அருளை பெற்று, நலம் பெறுவதற்கான நாளாக கருதப்படுவதால் இந்த நாளில் சில தவறுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என சொல்லப்படுகிறது. வெள்ளிக்கிழமையில் சில தவறுகளை தவிர்ப்பதால் மகாலட்சுமியின் கோபத்தில் இருந்து விடுபட முடியும்.
இந்துக்களின் வழிபாட்டு மரபில் வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிரகத்தின் ஆதிக்கம் பிறைந்த நாளாக கருதப்படுகிறது. இதனால் நவகிரகங்களின் அருளை பெறுவதற்காக அந்தந்த கிழமைகளில் அதற்குரிய கிரகங்களின் வழிபாட்டினையும், அந்த கிரகத்திற்கு அதிபதியாக விளங்கும் தெய்வத்தையும் வழிபடுவதால் வாழ்வில் ஏற்படும் பலவிதமான துன்பங்களில் இருந்து விடுபடலாம் என நம்பப்படுகிறது. அப்படி வெள்ளிக்கிழமை என்பது சுக்கிர பகவானுக்குரியதாகும். ஒருவருடைய வாழ்க்கையில் மகாலட்சுமியின் அருள் கிடைக்கவும், சுக போகமான வாழ்க்கை அமைவதற்கும் சுக்கிர பகவானின் அனுகிரகம் மிகவும் அவசியமானதாகும்.
அப்படி சுக்கிர பகவானுக்குரிய வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமியை வழிபட்டு, அவரது அருளை பெற வேண்டும். இதனால் சுபிட்சமான வாழ்க்கை அமையும். சகல விதமான செல்வ வளங்களும் பெற்று மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும் என்று நம்பப்படுகிறது. ஆனால் வெள்ளிக்கிழமையில் நாம் செய்யும் சில தவறுகளால் மகாலட்சுமியின் அருள் நமக்கு கிடைப்பது தடைபடுவதுடன் மகாலட்சுமியின் கோபத்திற்கும் ஆளாக வேண்டி இருக்கும்.